யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடற்படையால் கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு மற்றும் அப்பகுதி அரசு அதிகாரிகளின் சில நபர்களுக்கு வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடந்த வார இறுதியில் கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

இப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் மற்றும் அரசு நிறுவனங்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் A543 என்ற கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டனர், இந்த பயனத்துக்காக மாணவர்களின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த பயணத்தின் போது, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வட கடலின் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு, சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறைசாரான மீன்பிடித்தலால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்கு மற்றும் 169 மாணவர்களுக்கு முந்தைய இரண்டு சந்தர்ப்பங்களில் இதேபோன்ற பயணங்களை கடற்படை ஏற்பாடு செய்தது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் இணங்க கடற்படையால் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இது இலங்கை பிரதேசத்தின் கடல் வளங்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய பார்வையை பார்வையாளர்களுக்கு அளித்தது.