MT New Diamond கப்பலில் பொறியாளரின் நிலை குறித்து விசாரிக்க வைத்தியசாலைக்குச் சென்ற கடற்படையினர்

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கப்பலின் மூன்றாவது பொறியாளரின் நிலை குறித்து விசாரிக்க 2020 செப்டம்பர் 13 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மூன்று பேருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கல்முனை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரை சந்தித்த, கடற்படை வீரர் கே.ஜி.ஏ.எஸ்.எம். விஜேரத்ன, டி.எல்.கே.முதியன்சே, மற்றும் டபிள்யூ.ஜி.ஜி.யூ.சேனாரத்ன ஆகிய மீட்புக் குழுவின் உறுப்பினர்கள் அவருடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அவர் தீ நடுவில் புகையில் மூழ்கியிருந்த கப்பலின் மாடி நுழைவாயிலில் விழுந்ததால் பிரதான தளத்திற்கு அழைத்துச் செல்வது கடினமான பணியாக இருந்தாலும் கடற்படை வீரர்களின் உறுதியான மற்றும் கடுமையான முயற்சியால் மேல் மாடியிலிருந்து கீழே உள்ள பிரதான தளத்திற்கு தன்னை கொண்டு வர முடிந்தது தனது அதிர்ஷ்டம் என்று கூறினார்.

விபத்து நடந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதலில் சம்பவ இடத்திற்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் ரணரிசியின் கட்டளை அதிகாரியின் விரைவான முடிவுகள் மற்றும் தீர்மானத்தின் மூலம் கடற்படையால் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தன்னை காப்பாற்றிய மூன்று கடற்படையினர்களுக்கும் முழு கடற்படைக்கும் நன்றி தெரிவித்ததோடு, இது தொடர்பாக முழு இலங்கை மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.