ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் 2020 ஆகஸ்ட் 03 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலாக தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெட்தென்ன இயக்குநர் ஜெனரல்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, ரியர் அட்மிரல் போல் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப விடைபெற்றார்.

மேலும், கமாண்டிங் அதிகாரிகளால் ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் விடைபெற்ற பின்னர், கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களினால்அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் கஸ்ஸப போல், முன்னர் மேற்குக் கடற்படை கட்டளைத் துணைத் தளபதியாகவும், கடலோர காவல்படையின் துணை இயக்குநர் ஜெனரலாகவும், கடற்படை கலாசார அகடமியின் தளபதியாகவும், நிர்வாக இயக்குநர் ஜெனரலாகவும், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.