சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜூலை 22 ஆம் திகதி இரவு நகர்கோயில் கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் இரண்டு (02) நபர்கள் (02) கைது செய்தது.

கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஜூலை 22 ஆம் திகதி ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை கண்கானித்தனர். அதை சோதனை செய்வதுக்கு கடற்படையின் ரோந்துப் படகொன்று பயன்படுத்தப்பட்டதுடன் சோதனை முயற்சியின் போது, குறித்த டிங்கி படகில் இருந்தவர்கள் தப்பிக்க முயன்றனர். அவர்களின் முயற்சியைத் தோல்வியுற்ற கடற்படை, படகில் இருந்த இரு நபர்களுடன் டிங்கி படகை கைது செயதனர்.

சந்தேகத்திற்கிடமான டிங்கியை மேலும் சோதனை செய்த போது மீன்பிடி பொருட்களுடன், 54 கிராம் மற்றும் 380 மிலி கிராம் எடையுள்ள சில தங்க நகைகள் மற்றும் சுமார் 30,000.00 ரூபாய் பணம் கண்டு பிடிக்கப்பட்டன. அதன்படி, டிங்கி படகு, அங்கு இருந்த இரண்டு நபர்கள் (02), தங்க நகைகள், பணம் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களை கடற்படை பறிமுதல் செய்தது.

சந்தேக நபர்கள் 26 மற்றும் 41 வயதுடைய மரதன்கேனி வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொருட்களுடன் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்