நீரில் மூழ்கிய நபரின் சடலத்தை கடற்படை மீட்டுள்ளது

விக்டோரியா நீர்த்தேக்கத்தில், அம்பகொடே பன்சல சாலை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரைத் தேடி 2020 ஜூலை 22, அன்று கடற்படை மேற்கொண்டுள்ள சுழியோடி நடவடிக்கையின் போது காணாமல் போனவரின் சடலத்தை மீட்கப்பட்டடது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில், அம்பகொடே பன்சல சாலை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போன 20 வயது இளைஞனின் சடலத்தைக் கண்டுபிடிக்க கடற்படையின் உதவி கோரி தெல்தெனிய காவல்துறையின் வேண்டுகோளுக்கு பதிலளித்த இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை சுழியோடி குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

அதன்படி, ஒரு கடினமான பணிக்குப் பிறகு கடற்படை சுழியோடி குழுவினர் குறித்த நபரின் சடலத்தை மீட்டெடுத்தனர். மேலும் குறித்த சடலம் மேலதிக விசாரணைக்காக தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.