அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட பல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் 2020 ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

கடற்கரைகளின் அழகைப் பேணுவதற்கு கடற்படை தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அதன் படி குறித்த கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டன. காங்கேசந்துரை துறைமுகம் பகுதி, கசுரினா கடற்கரை, மாங்கும்பான் கடற்கரை, மண்டதீவு கடற்கரை, வல்லன் கடற்கரை, மாவலி கடற்கரை, சம்பில்துரை மற்றும் வெத்தலகேனி ஆகிய கடற்கரைகள் இவ்வாரு வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் சுத்தம் செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிறுவனம் அருகிலிருந்து காலி நகரம் வரையிலான கடற்கரை பகுதி மற்றும் தங்காலை பரைவெல்ல கடற்கரை தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் சுத்தம் செய்யப்பட்டன. துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்களுக்கு , அந்தந்த கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பங்கேற்றனர்.

கவனக்குறைவாக குப்பைகளை கடலுக்கு அகற்றுவதன் மூலம் மாசுபட்ட கடற்கரைகளை பாதுகாப்பதற்காக, கடற்படை இந்த இயற்கையின் பல சூழல் நட்பு திட்டங்களை மேற்கொள்கிறது மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை உறுதிபூண்டுள்ளது.


தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்