பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 24 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 24 நபர்கள் 2020 ஜூலை 15 மற்றும் 16,17 ஆம் திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த இந்த 24 நபர்களின் 15 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் 09 நபர் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் வெளியேறினர். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் கடற்படையால் வழங்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, 488 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிவிட்டனர், மேலும் 68 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், 81 நபர்கள் கற்பிட்டியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறியுள்ளனர், மேலும் 22 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.