இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய யோகட் திட்டத்திற்கான கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது

சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட யோகட் திட்டத்திற்கான கட்டிடத்தை 2020 ஜூலை 04 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் கருதி சேவா வனிதா பிரிவின் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்ட குறித்த யோகட் திட்டத்திற்கான கட்டிடத்தை 2020 ஜூலை 04 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வருகையுடன் சேவா வனிதா பிரிவு தலைவர் திருமதி அருந்ததி உதிதமாலா ஜெயநெத்தியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.