நயினாதீவு ரஜமஹா விஹாரயவில் அமைக்கப்பட்ட புதிய எண்ணெய் விளக்கு வேலி திறந்து வைக்கப்பட்டது

நயினாதீவு ரஜமஹா விஹாரயவில் இலங்கை கடற்படையால் அமைக்கப்பட்ட புதிய எண்ணெய் விளக்கு வேலி துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவினால் 2020 ஜூலை 04 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இலங்கை புத்த வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நயினாதீவு ரஜ மகா விஹார வளாகத்தில் புதிய விளக்கு வேலி கட்டுமானத்தை இலங்கை கடற்படை கடந்த தினங்களில் தொடங்கியுள்ளது. அழகான முரையில் விஹாரைக்கு மத முக்கியத்துவத்தை சேர்ப்பதுடன் நிறைவு செய்யப்பட்ட இந்த விளக்கு வேலி 2020 ஜூலை 4 ஆம் திகதி துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டன. வடக்கு கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிவில் பொறியியல் வீரர்களினால் குறித்த விளக்கு வேலி கட்டப்பட்டது.

விளக்கு வேலி திறக்கப்பட்ட பின்னர், துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஒரு போதி பூஜையில் பங்கேற்றனர்.