இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் புதிய நீச்சல் தடாகம் கடற்படைத் தளபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் 2020 ஜூலை 04 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் கடற்படையினர்களுக்கு அவசியமாக இருந்த, இந்த நீச்சல் தடாகம் கடற்படையின் சிவில் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படை பணியாளர்களின் முழு பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டது. திறப்பு விழாவைத் தொடர்ந்து கண்கவர் நீச்சல் போட்டியொன்று நடைபெற்றதுடன் அங்கு கடற்படைத் தளபதி பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந் நிகழ்வுக்காக பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியல், பணிப்பாளர் நாயகம் மின்சார மற்றும் மின்னணு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி உட்பட தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாலுமிகள் கலந்து கொண்டனர்.