திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 34 கடற்படை அதிகாரிகள் அதிகாரமலிக்கப்பட்டன

திருகோணமலை, கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்த 33வது மற்றும் 34 வது ஆட்சேர்ப்பின் 34 கடற்படை அதிகாரிகள் 2020 ஜூலை 03 ஆம் திகதி அதிகாரமலிக்கப்பட்டனர்.

அதன்படி, சர் ஜான் கொதலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த 33 (தொழில்நுட்ப) மற்றும் 34 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகள் இவ்வாரு அதிகாரமலிக்கப்பட்டனர். கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியின் தளபதி கொமடோர் பிரசன்ன மஹவிதானவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கடற்படை பணிப்பாளர் நாயகங்கள், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியின் தளபதி, கடற்படை தலைமையகத்தின் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த கடற்படை அதிகாரிகள், ஆயுதப் படைகளின் அதிகாரிகள், மூத்த பொலீஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் போது தமது திறன்களை வெளிக்காட்டிய மத்திய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. அதனடிப்படையில் 33 வது ஆட்சேர்ப்பின் அனைத்து பயிற்சிநெறிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மத்திய அதிகாரியாக பி.ஏ தலுகம தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வாள் மற்றும் கோப்பை மத்திய அதிகாரி டீ.எஸ் கருனாசேன பெற்றுள்ளார். தொழில்முறை பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெற்ற அதிகாரியாக டப்.ஜீ.எஸ் தீமந்த தெரிவு செய்யப்பட்டார். மிகச் சிறந்த விழையாட்டு வீரருக்கான விருது மத்திய அதிகாரி டி.எம்,பி நதிஷானி பெற்றுள்ளார். சிறந்த குறிவைத்த நபர் விருதை மத்திய அதிகாரி வீ.எஸ் விஜேகுனவர்தன பெற்றுள்ளார்.

அதிகாரிகள் அதிகாரமலிக்கும் விழா கடற்படை கலாச்சார குழுவின் மற்றும் கடற்படை இசைக்குழுவின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்றது. மேலும் கடற்படை மரபுகளின்படி மேற்கொள்ளப்பட்ட சூரியன் சடங்குகளின் பின் இந்த நிகழ்வு நிரைவடைந்ததுடன் நாட்டில் நிலவும் கோவிட் -19 அபாயகரமான நிலைமைகள் காரணமாக, இந்த நிகழ்வு சுகாதார அதிகாரிகள் வழங்கிய அனைத்து சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றி நடைபெற்றன.