சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்த ஒரு நபர் (01) கடற்படையினரால் கைது

பூனாவை,வெடிதிப்பாகல பகுதியில் 2020 ஜூலை 02 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரித்த இடமொன்று சுற்றிவழைத்து ஒரு சந்தேகநபருடன் சட்டவிரோத மதுபானங்கள் கைது செய்யப்பட்டன.

ශநாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், ஒரு சில சட்ட மீறல்களால் நிகழ்த்தப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் ஜூலை 02 ஆம் திகதி பூனாவை வெடிதிப்பாகல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபானம் வடிகட்டப்பட்ட ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கு இருந்து , 30 லிட்டர் ‘கோடா’, 10 லிட்டர் உள்ளூர் மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை வடிகட்டப் பயன்படும் பல உபகரணங்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் 50 வயதுடைய அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். இதற்கிடையில், சந்தேகநபர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மெதவச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.