திருகோணமலை நெதுன்கேனி காட்டு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல கனரக ரவைகளை மீட்கப்பட்டன

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜூன் 2 அன்று திருகோணமலை நெடுங்கேனி காட்டு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஏராளமான கனரக ரவைகளை மீட்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து நெடுங்கேனி காட்டு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 01 மல்டி பெரல் ரவை (ஓரளவு சேதமடைந்த), 81 மி.மீ மோட்டார் ரவை (01) மற்றும் ஒரு 120 மி.மீ பீரங்கி ரவை கண்டுபிடித்தனர்.

இந்த ரவைகள் மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது, மேலும் சர்தாபுர காவல்துறை சிறப்பு பணிக்குழு கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.