தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடமையேற்பு

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் 2020 ஜூன் 29 ஆம் திகதி கடமை யேற்றினார்.

அங்கு ரியர் அட்மிரல் உபுல் த சில்வாவை கடற்படை மரபுகளுக்கமைய தன்னார்வ கடற்படை தலைமையகத்திக்கு வரவேற்கப்பட்டது. தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் உபுல் த சில்வாக்கு ஒப்படைத்துள்ளார்.

இந் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமடோர் ஜே.கே.கே கமகே உட்பட பல அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.