கடற்படை தயாரித்த மேலும் ஒரு மெடி மேட் (Medi mate) இயந்திரம் தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன

மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட மற்றொரு மெடி மேட் (Medi mate) தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் இன்று (2020 மே 29) தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

ஒரு கண்டுபிடிப்பாளரான துஷார கெலும் வாதசிங்க அவர்களின் அடிப்படை கருத்தை கவணத்தில் கொண்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ், மெடிமேட் (Medimate) என்ற தானியங்கி சாதனயொன்று கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தனது புதிய தொழில்நுட்பத்தை பகண்படுத்தி உருவாக்கியுள்ளது. இவ்வாரு உருவாக்கப்பட்ட இந்த தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு இன்று (2020 மே 29) வழங்கப்பட்டதுடன். குறித்த தானியங்கி இயந்திரத்தை மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் மருந்துவர் அர்ஜுன திலகரத்ன அவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த இயந்திரம் உட்பட ஐந்து புதிய தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனங்கள் (மெடிமேட்) வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த சாதனம் மூலம் நோயாளிகளிடம் செல்லாமல் மருத்துவர்கள் அவகளுடைய அறிகுறிகளைக் கண்டறிய முடிகின்றதுடன் நோயாளிகளுடன் பேசவும், நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கவும், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகிறது.