பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர் மீன்டும் தாய் நாட்டுக்கு கொண்டு செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மீன்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர் கொண்டு செல்ல இந்த இரண்டு கப்பல்களும் இன்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மேலும், குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றின் விநியோகத் தேவையைப் பெற்றன. நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தொற்றுநோய்களின் கீழ், அனைத்து நிலையான சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, அனைத்து பிலிப்பைன்ஸ் நாட்டினரும் கப்பல்களில் ஏறுவதற்கு முன்பு முழுமையாக கருத்தடை செய்யப்பட்டனர்.

குறித்த கப்பல்கள் மே 30 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளன.