உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 22 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கொந்னோருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே, 2020 மே 22 ஆம் திகதி, கடற்படையினர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு பிரிவுடன் இணைந்து ஹம்பாந்தோட்டை கொந்னோருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 52 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.