சமுதுர கப்பல்‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளை நெருங்கியது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க 2020 மே 21 ஆம் திகதி புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் இப்போது குறித்த மீன்பிடி படகுகளை அடைந்துவிட்டு, அவர்களுடன் தகவல்தொடர்புகளை உருவாக்கியுள்ளது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இந்த மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவை வழங்க 2020 மே 21 ஆம் திகதி புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் இப்போது குறித்த மீன்பிடி படகுகள் உள்ள பகுதியை நெருங்கியது. மேலும், குறித்த கப்பல் மீன்பிடி படகுகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கி இப்போது இலங்கையை நோக்கி வருகின்றன. மேலும் இலங்கையை நோக்கி வருகின்ற போது மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளுக்கும் தேவையான உணவு, மருத்துவ உதவி மற்றும் எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் வழங்கப்படுகின்றன.

அதன்படி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பாக கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.