அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற திட்டங்களுக்கு ஆதரவாக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2020 ஏப்ரல் 29) கடற்படை தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதுடன் நாடு முழுவதும் பல தனிமைப்படுத்தப்பட்ட மையங்களையும் நிறுவியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நிறுவனங்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்டு தங்கொட்டுவ பீங்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 50 இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்கள் இன்று (2020 ஏப்ரல் 29) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அங்கு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா குறித்த உபகரணங்களைப் பெற்றார், இந்த நிகழ்வுக்காக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்கார மற்றும் தங்கொட்டுவ பீங்கான் தொழிற்சாலையில் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு கடற்படைத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.