எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் 2020 ஏப்ரல் 25, அன்று காலமானார்.

இறந்த நபர் கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கலென்பிந்துநுவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான லெப்டினன்ட் கமாண்டர் (தொண்ட்டூழியர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல ஆவார். அவர் 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி நோய் நிலை காரணமாக கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெலிசர கடற்படைத் தளத்தில் கோவிட் 19 வைரஸ் பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கடற்படை அதிகாரி கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருந்த போது அவர் 2020 ஏப்ரல் 25, அன்று உயிரிழந்துள்ளார்.

கோவிட் 19 வைரஸால் இந்த மரணம் ஏற்படவில்லை என்றாலும், வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக கோவிட் 19 இறப்புகளின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரியின் இறுதிச் சடங்குகளை நடத்துமாறு ராகம நீதித்துறை மருத்துவ அதிகாரி பரிந்துரைத்தார். அதன் படி இறுதிச் சடங்குகள் கடற்படையின் மரியாதையுடன் நடைபெறவுள்ளது.