அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற வேளாண் வேதிப்பொருட்களை கடற்படையால் கைப்பற்றப்பட்டது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி மெதவச்சி பூனேவ பகுதியில் உள்ள கடற்படை சாலைத் தடையில், வைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வேளாண் வேதிப்பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு லாரி வண்டியை கடற்படை கைப்பற்றியது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி மெதவச்சி பூனேவ பகுதியில் உள்ள கடற்படை சாலைத் தடையில் வைத்து சந்தேகத்திற்கிடமான லாரி வண்டியொன்று தடுத்து நிறுத்தினர். லாரி வண்டியை மேலும் சோதனை செய்த போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் லாரியில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வேளாண் வேதிப்பொருட்களை கண்டுபிடிக்கபட்டது. அங்கு அரிசி, மிளகாய் தூள் மற்றும் தேயிலை தூள் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களுடன் வைத்திருந்த 24 பாட்டில்கள் வேளாண் இரசாயனங்கள் அடங்கிய 160 பாக்கெட்டுகளை கண்டுபிடிக்க முடிந்தது. மேலும், லாரி வண்டியில் இருந்த இரண்டு பேரும் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 31 மற்றும் 37 வயதுடைய கிலினோச்சி மற்றும் வவுனியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். லாரி, அத்தியாவசிய உணவு, வேளாண் வேதிப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மெதவச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.