2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் தொடங்கிய 2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் இன்று (2020 பிப்ரவரி 29,) காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இப் படகோட்டப் போட்டித் தொடருக்காக கடற்படை பாய்மரக் பிரிவின் கடற்படையினர் உட்பட RCYC விளையாட்டு கழகம், கொழும்பு ராயல் கல்லூரி விளையாட்டு கழகம், கல்கிசை செயின்ட் தாமஸ் கல்லூரி விளையாட்டு கழகம், CMYC விளையாட்டு கழகம் மற்றும் கொழும்பு மகளிர் கல்லூரி விளையாட்டு கழகம் ஆகிய நாட்டின் புகழ்பெற்ற படகோட்டிக் கழகங்களைச் சேர்ந்த எண்பத்து ஏழு (87) விளையாட்டு வீர வீராங்கனிகள் 70 படகுகளுடன் பங்கேற்றனர். இங்கு Child Optimize, laser radial, Laser Standard, Laser 4.7, Enterprise, GP 14 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று பல போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்படி, போட்டித்தொடரில் முதல் நாள் போட்டிகள் இன்று நடைபெற்றதுடன் மேலும் பல நிகழ்வுகள் 2020 மார்ச் 1 ஆம் திகதி நடைபெறும், போட்டியின் பரிசு வழங்கல் விழா அன்று மாலை காலி முகத்திடம் கடற்கரையில் நடைபெறும்.