டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 பிப்ரவரி 28 ஆம் திகதி இரத்மலான விமானப்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் மற்றொரு போட்டியின் விமானப்படை அணியை 21 புள்ளிகளுக்கு 24 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

இப் போட்டித்தொடரில் பிரதம அதிதியாக டயலொக் ஆக்சியாடா நிருவனத்தின் தலைவர் கலந்து கொண்டதுடன் கடற்படையின் மற்றும் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இப் போட்டியில் ஆட்ட நாயகனாக கடற்படை வீரர் ஜி.ஆர்.எம்.சி.பி செனவிரத்ன தேர்வு செய்யப்பட்டார்.