சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கடற்படையினரினால் கைது

புத்தலம், உடப்புவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த நபர்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டன. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இரு டிங்கி படகுகள், இரு சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படையால் கைது செய்யபட்டது.மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் 26 முதல் 36 வயதுடைய கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகுகள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.