சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்

சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட பிரதிநிதிகள் இன்று (2020 பிப்ரவரி 25) வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட பிரதிநிதிகள் இவ்வாரு வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டதுடன் இயக்குனர் கடல்சார் பொறியியல் கொமடோர் கபில சில்வா மற்றும் வெலிசறை கடற்படை வளாகத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் பூஜித சுகததாச ஆகியோரினால் இவர்களை அன்புடன் வரவேற்கப்பட்டன. அதன் பின் கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தில் கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ள இவர்கள் அங்கு தயாரிக்கும் படகுகள் குறிப்பாக கவனித்தார்கள். படகு தயாரிக்கும் நிலையத்தின் முகாமையாளர், கொமான்டர் தினுக் போகாவத்த சாம்பியா இராணுவத் தளபதி உட்பட பிரதிநிதிகளுக்கு படகுகளின் கட்டுமானம் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் கொமடோர் அதிகாரி கப்பல்துறை (மேற்கு) தில்ருக் பதிரனவும் கலந்து கொண்டார்.