ஹெராயின் கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான மாலுமிகள் மற்றும் அம்பாரை பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து, கல்முனை பாலமுனை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அங்கு சந்தேகத்திற்கிடமான சிறிய லாரி (Dimo Batta) வண்டியொன்று கண்கானித்த கடற்படையினர் லாரி வண்டியை மேலும் பரிசோதித்தனர் அப்போது 05 கிராம் 750 மிலி கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன் லாரி வண்டியில் இருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதுடைய சமந்துரை மற்றும் பாலமுனை பகுதியில் குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அக்கரைப்பத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.