72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களை யொட்டி கடற்படைத் தளபதி கடற்படை வீரர்களைப் பாராட்டினார்

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற கடற்படை வீரர்களுக்கு (பெப்ரவரி 19) திகதி அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கடற்படை தளபதியை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் அதன் துணை தளபதி கொமடோர் பண்டுல சேனரத்ன அன்புடன் வரவேற்றார். அதன்பிறகு, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இலங்கை கடற்படை கப்பல் ரங்கல்லாவின் பிரதான அணிவகுப்பு மைதானத்திற்குச் சென்றார் மற்றும் 72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு அணிவகுப்பினால் அதிக கவர்ச்சியை அளித்த கடற்படைப் படையினரை பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கடற்படைத் துறைத் தலைவர், ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகெட்டென்ன மற்றும் இயக்குநர் பொது நிர்வாகம், ரியர் அட்மிரல் பிரியந்த குருகுலசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.