இரு ஆண்டு கடற்படை இதழின் ஐந்தாவது தொகுதியின் இரண்டாவது இதழ் தொடங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் கடற்படை ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள இரு ஆண்டு கடற்படை இதழின் 8 வது பதிப்பின் (தொகுதி 5, வெளியீடு 2) முதல் நகலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு பெப்ரவரி 18 அன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து அதன் தலைமை ஆசிரியர் கொமடோர் பிரதீப் ரத்நாயக்கவினால் வழங்ப்பட்டது.

இலங்கை கடற்படை இதழ் பல்வேறு துறைகளில் பகுப்பாய்வு சிந்தனை, கல்வி எழுதுதல் மற்றும் விரிவான வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை பணியாளர்களை ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.