உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை இன்று (2020 பிப்ரவரி 16) யாழ்ப்பாணம் பலச்சிவேலி பகுதியில் நடத்திய சோதனையின் போது கடற்படை கண்டுபிடித்தது.

அதன்படி, யாழ்ப்பாணம் பலச்சவேலி ஐயநாத் கோவிலடியி பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு செடிக்கு அருகில் நுட்பமாக மறைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குறித்த துப்பாக்கி பற்றிய மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன.