பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான், (David Ashman) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு

ශஇலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான் (David Ashman) இன்று (2020 பிப்ரவரி 15) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.ිය.

கடற்படையின் சிறப்பு படகு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான் (David Ashman) உட்பட தூதுக்குழு இன்று (2020 பிப்ரவரி 15) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை கட்டளை தலைமையகத்தில் சந்தித்தனர்.

அங்கு கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்க அதிகாரிகளை அன்புடன் வரவேற்றார். மேலும், இவர்கள் இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான், (David Ashman) நினைவு புத்தகத்தில் ஒரு குறிப்பை பதிவு செய்தார்