இது உங்கள் கடற்படை’ என்ற கருப்பொருளின் கீழ் காலி முகத்திடத்தில் நடைபெற்ற கடற்படை கண்காட்சி

இன்று (பெப்ரவரி 04) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, கடற்படை ஒரு அற்புதமான கடற்படை காட்சி மற்றும் கண்காட்சியை ‘இது உங்கள் கடற்படை’ என்ற தலைப்பில் காலி முகத்திடத்தில் ஏற்பாடு செய்தது.

சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒட்டி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா முன்வைத்த ஒரு யோசனையைத் தொடர்ந்து, கடற்படை இந்த கடற்படை காட்சி மற்றும் கண்காட்சியை காலி முகத்திடத்திலும் அதன் கரையிலிருந்தும் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ளது. ‘இது உங்கள் கடற்படை’ என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கடற்படை கண்காட்சியை பார்வையிட ஏராளமான மக்கள் வந்தனர்.

இந்த கண்காட்சி பார்வையாளர்களுக்கு கடற்படைக்குச் சொந்தமான மேம்பட்ட ஆஃப்ஷோர் ரோந்து கப்பல்கள் காலி முகத்திடத்தில் நங்கூரமிடப்படுவதைக் காணவும், கப்பல்களில் இருந்து நேரடி ஒளிபரப்பைப் பார்க்கவும் முதல் முறையாக ஒரு அரிய வாய்ப்பைக் கொடுத்தது.

கடற்படையின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் மற்றும் இலங்கை கடற்படையின் பசுமை மற்றும் நீல திட்டத்திற்க்கு ஏற்ப தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்துவதே இந்த கடற்படை காட்சியின் பிரதான நோக்கமாகும். அதன்படி, ஆமை பாதுகாப்பு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாத்தல், நீர் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையில் கடற்படையின் பங்கு, பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் தயாரிக்கப்பட்டபொருட்கள் மற்றும் கடற்படை தயாரிக்கும் கப்பல்கள் குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்க முடிந்தது.மேலும் ஆட்சேர்ப்பு குறித்த தகவல்களைப் பெற பொதுமக்களுக்கு வசதியும் இருந்தது.

இது தவிர, கண்கவர் படகு காட்சி, கடற்படையின் விரைவான மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) நிகழ்த்திய உயிர் காக்கும் பயிற்சிகள், படகோட்டம் போட்டி, ஜெட் ஸ்கை சவாரி, சிறப்பு படகு அணியின் படகு நிகழ்ச்சி மற்றும் 'அங்கம் பொர' ஆகியவற்றைக் காண பொதுமக்கள் ஆர்வமாக இருந்தனர். காலி முகத்திடத்திட வளாகத்தில் கடற்படை வீரர்களால் நிகழ்த்தப்பட்ட காட்சிகள் மக்களின் கவணத்தை ஈர்த்த்து.

இந்த அரிய மற்றும் அற்புதமான கடற்படை கண்காட்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, கடற்படைத் பணிப்பாளர் நாயகம், மேற்கு கடற்படைத் தளபதி, மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராலமான கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.