கடற்படை பங்களிப்புடன் பல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பல திட்டங்கள் ஹம்பாந்தோட்டை, பானம, பத்தலங்குண்டுவ மற்றும் திருகோணமலை கடற்கரை பகுதிகளை மையமாகக் 2020 ஜனவரி 31 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டன.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டம், திருகோணமலை கடற்படை தளத்திற்குள் உள்ள கரையோர பகுதியும், தெற்கு கடற்படை கட்டளை முலம் ஹம்பாந்தோட்டை கரையோர பகுதியும், தென்கிழக்கு கடற்படை கட்டளை மூலம் பானம கடற்கரை பகுதியும், வடமேற்கு கடற்படை கட்டளை மூலம் பத்தலங்குண்டுவ கடற்கரை பகுதியும் தூய்மைப்படுத்தப்பட்டது. இத் திட்டங்கள் மூலம் மனித நடவடிக்கைகளால் கடுமையாக சேதமடைந்த கடற்கரைகளை கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற முடிந்தது.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலுடன் தீவின் கடலோர பகுதிகளில் அழகை மேம்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.


கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்