கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 பிப்ரவரி 01 ஆம் திகதி கிலினோச்சி பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கிட்டத்தட்ட 02 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2020 பிப்ரவரி 01 ஆம் திகதி இலங்கை கடற்படை கிலினோச்சி பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து கிளிநொச்சி அரவியல்நகர் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவர் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் காணப்பட்டது. குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மேலும் ஆய்வு செய்த போது சுமார் 02 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளினோச்சி தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக கிலினொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படனர்