இலங்கை கடற்படை கடலாமை குட்டிகளை கடலுக்கு விடுவித்துள்ளது

அழிந்து வரும் விலங்குகளின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளைக் கொண்டுவருவதில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கடற்படை தளபதி, கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் திட்டக் குழுவின் தலைவர் வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், கடலாமை இனங்களை பாதுகாத்து கடலுக்கு விடுவிக்கும் முதன்மை நோக்கத்துடன் பல கடலாமை பாதுகாப்பு திட்டங்களை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, களுத்துறை விரைவான அதிரடி பயிற்சி பிரிவுக்கு சொந்தமான கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கடலாமை முட்டைகள் கடற்படையினரால் பாதுகாக்கப்பட்ட பின்னர் 2020 ஜனவரி 25 அன்று 40 கடலாமை குட்டிகளை கடலுக்கு விடப்பட்டன. இலங்கை கடற்படை மேற்கொண்ட கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் காரணமாக இந்த கடற்கரைகளில் கடலாமைகள் முட்டையிடுவது அதிகரித்துள்ளது.

மேலும், கடல் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை கடற்படை உணர்ந்துள்ளதுடன், தீவை சுற்றி உள்ள முழு கடற்கரையையும் உள்ளடக்கி கடல் வளங்களை பாதுகாப்பதில் கடற்படையின் திறமையான பணியாளர்கள் பெரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.