பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படை இடையில் நட்பு கூடைப்பந்து போட்டித்தொடர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ் (Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்களின் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் இடையில் நட்பு கூடைப்பந்து போட்டி யொன்று இன்று (2020 ஜனவரி 27) நடைபெற்றது.

வெலிசர கடற்படை முகாம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டி மிகவும் உற்சாகமான விளையாட்டு நிகழ்வாக மற்றும் இரு நாடுகளின் அணிகளுக்கும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளதுடன் போட்டியின் முடிவில், கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற இரு அணிகளின் வீரர்கள் குழு புகைப்படத்துக்கும் முகம் கொடுத்தார்கள்.