காத்தான்குடி களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (2020 ஜனவரி 07) காத்தான்குடி களப்பு பகுதியில் இருந்து 08 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடலில் மீன்வள மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை மற்றொரு நடவடிக்கை காத்தான்குடி களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு இருந்து இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.