யானையின் முத்துக்கள் விற்பனைக்கு முயற்சித்த 07 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 டிசம்பர் 31 ஆம் திகதி கல்முனை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது யானையின் முத்துக்கள் வைத்திருந்த ஏலு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை போலீஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து கல்முனை பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வேன் வண்டி ஒன்று கண்கானித்தனர். குறித்த வேன் வண்டி சோதனை செய்த போது வேனில் பயணித்த நபர்களிடமிருந்து ஐந்து யானை முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் வேனில் பயணித்த ஏழு (07) சந்தேக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அப்போது சந்தேக நபர்கள் சட்டவிரோத விற்பனைக்காக முத்துக்கள் சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சந்தேகநபர்கள் 24,27,28,31,37 மற்றும் 39 வயதுடைய கின்னியா மற்றும் கந்தலை பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது., சந்தேக நபர்கள் யானை முத்துக்களுடன் கல்முனை போலீசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.