கண்டி குளத்தில் உள்ள நீர்க் குழாய் சுழலி சரிசெய்ய கடற்படையால் சுழியோடி நடவடிக்கை

கண்டி குளத்தில் உள்ள நீர்க் குழாய் சுழலி சரிசெய்ய 2019 டிசம்பர் 23 ஆம் திகதி கடற்படையால் சுழியோடி நடவடிக்கை யொன்று மேற்கொள்ளப்பட்டது.

கண்டி குளத்தில் அலங்காரத்தை மேம்படுத்துவதுக்காக உள்ள நீர்க் குழாய் சுழலி சில காலமாக செயலற்ற நிலையில் இருந்தது குறித்த நீர்க் குழாய் சுழலி சரிசெய்வதற்காக நீர்க் குழாயின் இயந்திரப் பகுதியை அகற்றுமாறு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் நிர்வாக பிரிவு கடற்படையின் கோரியுள்ளது. அதன்படி இந்த பணிக்காக ஆறு கடற்படை சுழியோடிகள் இணைக்க கடற்படையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கு கடும் பணியில் ஈடுபட்ட கடற்படை சுழியோடி பிரிவின் வீரர்கள், நீர்க் குழாய் சுழலியின் இயந்திரப் பகுதியை அகற்றி சரிசெய்வதற்காக தலதா மாளிகை நிர்வாகக் கிளையில் ஒப்படைத்தனர்.