சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மீனவர்களைக் கைது செய்வதற்காக கடற்படை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகமான படகொன்று மட்டக்களப்பு கடல் பகுதியில் கண்கானிக்கப்பட்டது. மேலும் குறித்த படகை கடற்படையால் ஆய்வு செய்ய தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையில், இந்த படகு பதிவு செய்யப்படாத படகொன்று என்பதும் மீன்பிடி அனுமதி பத்திரிக்கைகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இங்கு குறித்த நபர்கள் மற்றும் படகு கடற்படையால் கைது செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம், ஒரு மீன்பிடி வலை மற்றும் சட்டவிரோதமாக பிடிபட்ட 40 கிலோ கிராம் மீன் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் சிங்காராத்தோப்பு மற்றும் எராவூர் பகுதியில் வசிக்கின்ற 35 மற்றும் 41 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.