சட்டவிரோதமாக குடியேறிய குழுவை இலங்கை கடற்படை கைப்பற்றியது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி திருகோணமலை பாடிகேய் பகுதியில் கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக செல்ல முயன்ற நான்கு இலங்கை நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மேலும், குறித்த நபர்கள் பயன்படுத்திய படகு உகந்த குனுகல, பாணம கடற்கரையில் இருந்து கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணையில், அவர்களுடன் சுமார் 50 பேர் சட்டவிரோதமாக குடியேற தயாராகி இருந்ததாக தெரியவந்ததுடன் மற்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத இடம்பெயர்வுக்கான முயற்சிகள் கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளால் சந்தேக நபர்கள் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அறியப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கடற்படை மற்றும் இலங்கை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாரு கடற்படையால் மேற்கொள்கின்ற சோதனை நடவடிக்கைகளின் விளைவாக, சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் நடவடிக்கைகளை குறைக்க முடிந்தது.