கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவு

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு போட்டித்தொடர்-2019 சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுரவில் உள்ள பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக 9 வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பத்து (10) துரப்பணிக் குழுக்கள் போட்டியில் பங்கு பெற்றதுடன் மேற்கு கடற்படை கட்டளை போட்டித்தொடரை வென்றது. கடற்படை கொடி கட்டளை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது

மேற்கு கடற்படை கட்டளை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் ஆர்.ஏ சிங்களக்ஷன போட்டியின் சிறந்த கட்டளையாலராக தேர்வு செய்யப்பட்டார். போட்டியைக் காண ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.