மன்சி தேசிய கைப்பந்து போட்டித்தொடரில் சூப்பர் லீக் பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை வென்றது

இலங்கை கைப்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மன்சி தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப், மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் உட்புற மைதானத்தில் 2019 டிசம்பர் 28 அன்று நிறைவடைந்ததுடன் அங்கு சூப்பர் லீக் (Supper League) பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை அணி வென்றது.

மேலும், மன்சி தேசிய கைப்பந்து போட்டித்தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை கடற்படை பெண்கள் கைப்பந்து அணி தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் கைப்பந்து அணி இலங்கை விமானப்படை பெண்கள் கைப்பந்து அணியுடன் விளையாடியது.

இங்கு கடற்படை கைப்பந்து அணியின் திலுஷா சஞ்சீவனி சிறந்த தற்காப்பு வீரராகவும், சிறந்த பந்துவீச்சாளராக நளந்திகா சஞ்சீவனி தேர்வு செய்யப்பட்டார்.