போதைப்பொருள் வைத்திருந்த இருவர் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 28 ஆம் திகதி திருகோணமலை, சீனா துறைமுகம் பகுதியில் மேற்கொண்ட குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருளை ஒழிப்பதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படை பொலிஸாருடன் இனைந்து திருகோணமலை, சீன துறைமுக பகுதியில் பயணித்த ஒரு சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று சோதனை செய்தனர். சோதனை செய்த முச்சக்கர வண்டியில் பயணித்த நபர்களிடமிருந்து 04 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணையில் சந்தேக நபர்கள் 28 முதல் 30 வயதுக்குட்பட்ட திருகோணமலையில் வசிப்பவர்கள் என்பதும் இவர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் குறித்து உப்புவேலி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிக்கும் பிரச்சாரத்திற்கு கடற்படை தொடர்ந்து ஆதரவளிக்கும்.