போதைப்பொருளை அகற்ற இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையின் ஒரு கூட்டு நடவடிக்கையை

2019 டிசம்பர் 28 ஆம் திகதி கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில், உள்ளூர் மதுபானங்களை தயாரித்து கேரள கஞ்சா வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்காக வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போலீஸ் சிறப்பு பணிக்குழு உடன் இலங்கை கடற்படை, கிலினொச்சியின் செல்வநகரில் உள்ளூர் மதுபானம் கண்டுபிடித்துள்ளதடன் மேலும் தேடுகையில் 20 லிட்டர் உள்ளூர் மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பீப்பாய் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

வீட்டில் கிட்டத்தட்ட 2 கிலோகிராம் கஞ்சா இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படி, போதைப்பொருள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் அப்பகுதியில் வசிக்கும் 29 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், உள்ளூர் மதுபானம், கேரள கஞ்சா, மோட்டார் பைக் மற்றும் பிற உபகரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் கிலினோச்சி பொலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடல் மற்றும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தேசிய பணியை கடற்படை தொடர்கிறது.