சட்டவிரோதமாக ஆடுகளை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது

திருகோணமலையில் உப்பாரு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக ஆடுகளை கடத்தி வந்த இருவரை, இன்று (டிசம்பர் 28) கடற்படை கைது செய்தது.

தீவு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சோதனைகளின் ஒரு பகுதியாக, கடற்படை நிர்வகிக்கும் சாலைத் தொகுதியில், திருகோணமலையின் உப்பாருவில் உள்ள ஜிங்கே பாலம் அருகே இந்த தேடல் மேற்கொள்ளப்பட்டது, அங்கு சந்தேகத்திற்கிடமான வண்டி மாலுமிகளால் தேடப்பட்டது. இந்த வண்டி 44 ஆடுகளை சட்டவிரோதமாக கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் வண்டியுடன் இருந்த இரண்டு நபர்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த ஆடுகள் தோபூரிலிருந்து மிஹிந்தலைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டன. சந்தேக நபர்கள் 23 மற்றும் 27 வயதுடைய மிஹிந்தலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர். வண்டி, சந்தேக நபர்கள் மற்றும் ஆடுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கின்னியா பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.