ரஷ்ய கடற்படை பிரதிநிதிகள் குழு இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை இன்று (நவம்பர் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த ரஷ்ய கடற்படையின் இராணுவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணைத் தளபதி (கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் வெளிநாட்டு பயிற்சி), ரியர் அட்மிரல் (கலாநிதி) அலெக்சாண்டர் வி. கபோவ் உட்பட பிரதிநிதிகள் இவ்வாரு கடற்படை தளபதியை சந்தித்தனர். அங்கு ரியர் அட்மிரல் (கலாநிதி) அலெக்சாண்டர் மற்றும் பிற பிரதிநிதிகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அன்புடன் வரவேற்றார்.

இங்கு இரு நாடுகளில் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் மேலும் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.