கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா 2019 நவம்பர் 29 ஆம் திகதி அலரி மாலிகயில் வைத்து இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பு கெளரவ பிரதமர் கடமையேற்ற பின் கடற்படைத் தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும். அங்கு கடற்படைத் தளபதி முதலில் தனது வாழ்த்துக்களை கெளரவ பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.

அங்கு இவர்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களினால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.