224 கிலோகிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் தென் கடலில் வைத்து கடற்படையால் கைது

இலங்கைக்கு சொந்தமான தென் கடல் பகுதியில் 224 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கொண்டு சென்று கொண்டிருந்த மீன்பிடி படகொன்று 2019 நவம்பர் 03 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.

காலி கடற்கரையில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு மீன்பிடிக் படகுக்குள் மறைத்து வைக்கப்பட்ட இந்த போதைப்பொருளை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, படகில் இருந்த 05 இலங்கை நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் குறித்த போதைப்பொருட்களைப் பெற்றதற்காக டிங்கி படகு மூலம் வந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அதன் படி இந்த நடவடிக்கை மூலம் 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்னர்.

கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த போதைப்பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட படகு, சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்க உள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்குள் மட்டும் கடற்படையின் நடவடிக்கைகளின் போது 739 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த ஆண்டுக்குள் மட்டும் நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த மற்றும் நாட்டிற்குள் தடை செய்யப்பட்ட மூன்று டன் கேரள கஞ்சா (3263 கிலோகிராம்), எட்டு கிலோகிராம் உள்ளூர் கஞ்சா, 42 டன் பீடி இலைகள் (42851 கிலோகிராம்) உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்கள் கைது செய்து தேசிய மருந்து தடுப்பு திட்டத்திற்கு கடற்படை பங்களித்துள்ளது.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படை மிக உயர்ந்த சர்வதேச ஆதரவைப் பெற்றுள்ளதுடன், அது முலம் பரவலான சோதனைகளையும் நடத்த முடிந்தது. மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் மற்றும் நாட்டுக்குள் மேற்கொள்ளப்பட்டுகின்ற சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான தேசிய பணிக்காக கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடரும்.