அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (நவம்பர் 02) வாக்கரையில் உள்ள கோவில் குடியிருப்பு பகுதியில் கடற்படை அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலகைளை மீட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், வாக்கரை பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை மீட்டுள்ளனர்.இதனையடுத்து, இந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.