நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

மொஹட்டிகோட, கோனபோல பாதையில் உள்ள பாலத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க இலங்கை கடற்படை 2019 அக்டோபர் 31 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

மொஹட்டிகோட கோனபோல பாதையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்தில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக மோராகஹேன காவல்துறையினரினால் கடற்படை தலைமையகத்திற்கு தெரிவித்துள்ளது. உடனடியாக, கடற்படை மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சுழியோடி குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியது. பலியானவரின் சடலம் அவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மொராகாஹேன போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.